விருது வழங்கும் விழாவில் நடனமாடி மேடையிலேயே உயிரிழந்த தொழிலதிபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
146Shares

ஆக்ராவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தொழிலதிபர், விருதினை வாங்கிய பின்னர் மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Travel agents என்ற நிகழ்ச்சி ஆக்ராவில் நடைபெற்றது. இதில், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விருது நிகழ்ச்சியில் Vishnu Pandey (53) என்ற தொழிலதிபருக்கு விருது வழங்கப்பட்டது, இவரது பெயரை அறிவித்தவுடன், சந்தோஷத்தில் எழுந்து சென்று உற்சாகத்தில் அனைவர் முன்னிலையிலும் மேடையில் வைத்து நடனமாடியுள்ளார்.

நடனமாடிக்கொண்டிருக்கையில், திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்