வயிற்று வலியால் துடித்த பெண்மணி: சிகிச்சை என கூறி கற்பழித்த சாமியார்

Report Print Arbin Arbin in இந்தியா
197Shares

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நாள்பட்ட வயிற்று வலிக்காக சிகிச்சை அளிப்பதாக கூறி திருமணமான பெண்மணியை கற்பழித்த வழக்கில் சாமியார் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது..

உத்தரபிரதேசத்தின் விருந்தாவன் பகுதியில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் பாபா த்வர்காதாஸ். இவரது ஆசிரமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு யூலை மாதம்

நாள்பட்ட வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்மணியும் அவரது கணவனும்.

இந்த நிலையில் இரவு 10 மணிக்கு சிகிச்சை துவங்கலாம் என கூறிய சாமியார், குறித்த ஆசிரமத்தின் இரண்டாவது நிலையில் உள்ள அறை ஒன்றில் குறித்த பெண்மணியை தனியாக தங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இரவு 10 மணியானது குறித்த பெண்மணியின் கணவரிடம் ஒரு மண் விளக்கை அளித்து அந்த விளக்கு அணைந்தால் மட்டுமே அறைக்கு திரும்ப வேண்டும் என கூறி ஆசிரமத்தின் கீழ் தளத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சிகிச்சை துவங்கிய மந்திரவாதி குறித்த பெண்மணியை நிர்வாணப்படுத்தி அவரது எதிர்ப்பையும் மீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

உடலில் கெட்டுப்பட்டிருக்கும் அசுத்த ஆவிகளை துரத்தவே உறவு கொண்டதாகவும், அந்த பெண்மணியிடம் சாமியார் கூறியுள்ளார்.

அடுத்த நாள் காலை மீண்டும் குறித்த பெண்மணியை பலாத்காரம் செய்த சாமியார், அதற்கும் ஒரு காரணம் கூறியுள்ளார்.

மட்டுமின்றி சிகிச்சை குறித்து வெளியே கூறினால் மொத்த குடும்பத்திற்கே ஆபத்தாக முடியும் எனவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

ஆனால் அன்றைய தினமே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தமது கணவரிடம் கூறிய பெண்மணி, உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் முடிவு செய்தனர். இதனையடுத்து விருந்தாவன் காவல் நிலையத்தில் வந்த குறித்த பெண்மணியும் கணவரும் நடந்தவற்றை கூறி, தொடர்புடைய சாமியார் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் குறித்த சாமியார் குற்றவாளி என நிரூபணமனதை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 18 மாதங்கள் சிறை தண்டனைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்