மான் வேட்டையாடிய விவகாரம்: கண்கலங்கிய நடிகர் சல்மான்கான்

Report Print Arbin Arbin in இந்தியா
126Shares

மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது.

மட்டுமின்றி சைஃப் அலி கான், தபு, சோனாலி, நீலம் ஆகியோரை வழக்கிலிருந்தும் விடுவித்துள்ளது.

1998ம் ஆண்டு படப்பிடிப்பின் போது 2 மான்களை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் நடிகர் சல்மான்கானை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

1998-ம் ஆண்டு அக்டோபர் 2ஆம் திகதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் அன்று இரவு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மான்களை நடிகர் சல்மான்கான் சுட்டுக்கொன்றபோது மற்ற நடிகர், நடிகைகளும் இருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் வாதமும் கடந்த 24ந் தேதியுடன் முடிவடைந்தது. அனைத்து தரப்பின் இறுதி வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என அறிவித்தார். குற்றம்சாட்டப்பட் மற்ற அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்பு வெளியாவதையொட்டி சல்மான் கான் தனது பாதுகாவலருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். சல்மான் கானுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, வருத்தத்தில் சல்மான்கான் கண்கலங்கினார். மேலும், சல்மான்கான் மீதான கடைசி மான்வேட்டை வழக்கு இதுவாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்