தமிழகத்தில் முழு கடையடைப்பு: ஆங்காங்கே பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

Report Print Raju Raju in இந்தியா
65Shares

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

மதுரையில் மேலமாசி வீதி, கீழமாசி வீதி, பாண்டி பஜார், மீனாட்சி பஜார் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மருந்துக் கடைகள் மட்டுமே ஓரளவு திறக்கப்பட்டுள்ளன.

அங்கு 90 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாயிரம் கடைகளை அடைத்து வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் மருந்துக் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன.

தூத்துக்குடியில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்துகள் - ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.

சென்னையிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் சின்னக் கடை வீதி, டவுன் , செவ்வாய்பேட்டை, சத்திரம், லீபஜார் பகுதிகள் வெறிச்சோடின.

ஆனால் எல்லா இடங்களிலும் அரசு பேருந்துகள் இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்துகள் இயக்கப்படுவதை கண்டித்து சில பேருந்துகளின் கண்ணாடிகள் ஆங்காங்கே உடைக்கப்பட்டன.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்