காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் எதிர்கட்சி சார்பாக பந்த் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினை பொலிசார் கைது செய்துள்ளனர்.
காவரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்திய ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களை பொலிசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ள நிலையில் சென்னையில் அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக சென்று மறியல் போராட்டம் செய்தனர்.
கைது செய்வதற்காக ஸ்டாலினை பொலிசார் குண்டுக்கட்டமாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் அண்ணாவின் காலடியில் விரிந்திருக்கும் அண்ணாசாலையில் அமர்ந்து திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின், வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் என பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் @mkstalin #Kaveri pic.twitter.com/TyQQ1Bbgiu
— jayachandhiran (@imjaiindian) April 5, 2018
மறியல் போராட்டம் பேரணியாக மாற்றப்பட்டு மெரீனா கடற்கரையை நோக்கி தொண்டர்கள் செல்கின்றனர். ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் அங்கு செல்லக்கூடும் என்பதை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.