வயிற்று வலிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை: மருத்துவர்களின் அலட்சியம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
68Shares

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வயிற்று வலி என வந்த பெண்ணுக்கு சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சஹர்சாவைச் சேர்ந்தவர் ரேகா தேவி என்பவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்த காரணத்தால், டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு, இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் மூத்த மருத்துவ பேராசிரியர் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்காமல் டயாலிஸ் சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னரும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை. பின்னர்தான் தவறான சிகிச்சை அளித்த விஷயம் தெரிய வந்தது. ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறியதுதான் தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படு கிறது.

இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை டீன் டாக்டர் ஓய்.கே.குப்தா, குழு அமைத்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்