3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 18 வயது இளைஞர்: கொடூரத்தின் உச்சகட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
183Shares

உத்திரபிரதேசத்தில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Rampur- இல் வசித்து வந்த 18 வயது இளைஞர், தனது வீட்டின் அருகில் உள்ள 3 வயது குழந்தையை அவ்வப்போது கண்காணித்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று, அக்குழந்தை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த இளைஞர், சொக்லேட் தருவதாக கூறி தனது வீட்டிற்கு தூக்கிசென்றுள்ளான்.

அங்கு குழந்தையை பலாத்காரம் செய்கையில், குழந்தை சத்தம்போட்டு அழுதுள்ளது. அதன்பின்னர், குழந்தையை ஒரு பெட்டிக்குள் போட்டு மூடியுள்ளான்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் அவனது வீட்டிற்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு குழந்தை இல்லை. பின்னர் சந்தேகத்தில் வீட்டினை சோதனை செய்கையில், பெட்டிக்குள் ரத்தவெள்ளத்தில் இருந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது

தற்போது இந்த இளைஞன் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்