இலங்கை தமிழர்களுக்கு மட்டும் இலவசம்

Report Print Raju Raju in இந்தியா
926Shares

சென்னையில் செயல்படும் ஒரு ஜெராக்ஸ் கடையில் கடை உரிமையாளரால் எழுதப்பட்டிருக்கும் வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது எழிலகம் வளாகம். இங்கு நில நிர்வாகம், மாநில திட்ட ஆணையம், வணிக வரி, பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் உட்பட பல்வேறு முக்கிய அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

எழிலகம் வளாகத்தின் உள்ளே வள்ளிம்மை ஜெராக்ஸ் என்ற பெயரில் கடை அமைந்துள்ளது.

இங்கு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் ஜெராக்ஸ் இலவசமாக எடுத்து தரப்படுகிறது.

கடை பெயருக்கு கீழேயே இலங்கை தமிழர்களுக்கு ஜெராக்ஸ் இலவசம் என எழுதப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்