வங்கியில் 150 கோடி பணம் எடுக்க வந்த மனநோயாளி: செய்த செயலால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா
219Shares

வங்கியில் 150 கோடி பணத்தை எடுக்க வந்ததாக நபர் ஒருவர் கூறிய நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹபூரை சேர்ந்த மங்கல் சிங் (33) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கிக்கு சென்றுள்ளார்.

பின்னர் வங்கி மேலாளரிடம் தனது கணக்கிலிருந்து 150 கோடியை எடுக்க வேண்டும் என கூறி பணத்தை எடுத்து செல்ல 4 கோணிப்பைகளை வைத்துள்ளதாக கூறி காட்டியுள்ளார்.

மங்கல் சிங்கின் நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதை அறிந்த மேலாளர், அவர் எழுதி கொடுத்த படிவத்தை சோதனை செய்து அவர் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என பார்த்துள்ளார்.

அப்போது அந்த கணக்கானது கடந்த 2016-லிருந்து செயல்படவில்லை எனவும், கணக்கில் பணமே இல்லை எனவும் தெரியவந்தது.

இதையடுத்து மங்கல் சிங்கை அங்கிருந்த பாதுகாவலர் வெளியேற்ற முயன்ற போது, அவரை மங்கல் அடிக்க பாய்ந்துள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் மங்கல் சிங்கை கைது செய்தனர்.

பின்னர் மங்கலின் குடும்பத்தார் காவல் நிலையத்துக்கு வந்து, அவருக்கு மனநலம் பாதித்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

இதையடுத்து வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படாமல் மங்கல் சிங் விடுவிக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்