சென்னையை சேர்ந்த குமாரசாமி என்பவரின் வீட்டு வாசலில் உள்ள வலம்புரி விநாயகர் சிலை, அம்மன் சிலையாக உருமாறியுள்ளது.
பலருக்கும் தகவல் பரவியதை அடுத்து, தண்டையார் பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், சிலையைக் காண திரண்டனர்.
இதனையடுத்து, அங்கு வந்த ராயபுரம் காவல்துறையினர், பக்தர்கள் அனைவரையும் வரிசையாகச் செல்லுமாறு அறிவுறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
வலம்புரி விநாயகர், அம்மனாக மாறியதை பார்த்த பலரும், சிலையை செல்போன்களில் படம் பிடித்தனர். மேலும் சிலர், அம்மனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.