காதலியை கொலை செய்தது ஏன்? காதலன் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
433Shares

தமிழ்நாட்டில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை தீர்த்துகட்டியதாக கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தின் பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் மகள் வைத்தீஸ்வரி (16).

வைத்தீஸ்வரி அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 1-ந் திகதி காலை வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பரதூர் சாவடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள முட்புதரில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் மணிகண்டன் (26) என்பவரை அவர் காதலித்தது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை பொலிசார் பிடித்து விசாரித்ததில் பாலியல் பலாத்கார முயற்சியில் வைத்தீஸ்வரியை தான் கொன்றதாக தெரிவித்தார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், வைத்தீஸ்வரியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம்.

சம்பவத்தன்று பரதூர் சாவடியில் அவருடன் நான் பேசி கொண்டிருந்த போது மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது, ஆசைவார்த்தை கூறி வைத்தீஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். ஆனால் அதற்கு அவள் மறுப்பு தெரிவித்தார்

தொடர்ந்து நான் அவளை பலாத்காரம் செய்ய முயன்று, அடித்ததில், அவள் மயங்கி விழுந்தாள்.

உடனே நான் அங்கிருந்து சென்று விட்டேன். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வந்து பார்த்த போது அங்கு வைத்தீஸ்வரி பிணமாக கிடந்தாள்.

இதன்பின்னர் அவளது உடலை முட்புதருக்குள் மறைத்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்