தமிழகத்தில் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமமைச் சேர்ந்த தம்பதி பழனிவேல்-ராணி. இவர்களுக்கு கலையரசி என்ற மகள் உள்ளார்.
7-ஆம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று முன் தினம் பள்ளி விடுமுறை என்பதால் தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஏரியில் ஆழம் அதிகமாக இருந்ததைக் கவனிக்காமல் ஏரியின் உள்பக்கத்துக்குள் செல்லச் செல்ல அவர் ஒரு கட்டத்தில் நீரில் மூழ்கினார்.
ஆனால் அவருடன் குழிக்கச் சென்ற சக தோழிகள், தண்ணீரில் அதிக நேரம் மூழ்கியிருப்பதற்காக இப்படி செய்கிறாள் என்று கவனிக்காமல் இருந்துள்ளனர்.
சுமார் அரைமணி நேரம் ஆகியும் அவர் நீரில் இருந்து வெளியே வராததால், ஏரியில் துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.
உடனடியாக அவர் அந்த வழியே நடந்து சென்றவர்களிடம் சத்தம் போட்டதால், அவர்கள் ஏரியில் வந்து தேடியுள்ளனர்.
இரண்டு மணி நேர போராட்டத்துக் பின் அவரை சடலமாக மீட்டுள்ளனர். சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குளத்தில் குளிக்கும்போது யார் அதிக நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள் என்று அவர்களுக்குள் அவ்வப்போது போட்டி நடக்குமாம். இதனால், கலையரசி நீரில் முழ்கியது தெரியாமல் சக தோழிகள் நம்பரை எண்ணிக்கொண்டிருந்தாகவும், விளையாட்டு விபரீதமானது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.