காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுகவினரால் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சில அதிமுக தொண்டர்கள் சிலர் இந்த உண்ணாவிரத்தை உண்ணும் விரதமாக மாற்றி இருந்த நிலையில், புதுக்கோட்டை மற்றும் கோவையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் அருகில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு படையெடுத்தனர்.
இதனை வீடியோ எடுத்த செய்தியாளரையும் தாக்கியுள்ளனர்.
தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது .
உலகுக்கே உணவிடும் விவசாயிகளின் வேதனையைப் புரிந்து கொள்ளாமல் எரிகிற வீட்டில் கிடைத்த வரை லாபம் என சில கட்சித் தொண்டர்கள் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வதும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் சில முக்கிய அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டு தமிழகத்தின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருப்பதும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.