ஆழமான காதல்: பலாத்கார குற்றவாளியை மும்பை நீதிமன்றம் விடுவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையில் பலாத்கார குற்றவாளி என 10 ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நபருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஆழமான காதல் இருந்ததாக கூறி மும்பை உயர் நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்துள்ளது.

யோகேஷ் பல்கர் என்பவர் மீது 25 வயது பெண் அளித்திருந்த புகாரில், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, 2013-ல் என்னுடன் முதன் முதலில் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் பிறகு இதே ஆசை வார்த்தைகளைக் கூறி பல முறை உறவு வைத்துக் கொண்டதாகவும் பிறகு 2014 முதல் என்னை தவிர்த்துவந்தார்.

தன்னை திருமணம் செய்துகொள்ளாததற்குக் காரணம் தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்தப் பெண் தன் மனுவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து யோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், கீழ் நீதிமன்றம் பாலியல் பலாத்கார குற்றவாளி என்று யோகேஷ் பல்கரை தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ரூ.10,000 அபராதமும் விதித்தது.

இதனை எதிர்த்து யோகேஷ், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது இதுதொடர்பான விசாரணயின் போது, பல்கரை தான் சிறைகளில் பார்க்க விரும்பவில்லை என்றும் சொந்த மற்றும் உணர்ச்சிப்பூர்வ காரணங்களுக்காக தன் மனுவை வாபஸ் பெறுவதாகவும் பின் வாங்கியுள்ளார்.

இதனை கேட்ட நீதிபதி, முதல் முறையைத் தொடர்ந்து பலமுறை குற்றம்சாட்டப்பட்டவருடன் இந்தப் பெண் உறவு வைத்துக் கொண்டுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறுமளவுக்கும் புகார் மனுதாரர் சென்றுள்ளார், எனவே இது புகார் அளித்த பெண்ணுக்கும் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் இடையே ஆழமான காதல் இருப்பதையே உணர்த்துகிறது.

எனவே, குற்றம்சாட்டப்பட்டவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அளித்த உறுதி மொழியினால் இந்த உறவு நடந்ததாக கூறுவதற்கில்லை என்று நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்