தமிழ் மக்களுக்கு என் உயிர் தியாகம்: காவிரி பிரச்னையில் இளைஞர் தற்கொலை

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த 31ம் திகதி பிரபு என்ற இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு என்பவர் கடந்த 31ம் திகதி எலி மருந்து சாப்பிட்டு தற்போது சேலம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக பிரபு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டிய தமிழக சட்டபேரவை எதிக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தெரிவித்திருந்தார், அவர் தமிழகம் வருவதை கண்டித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளுவதாகவும் அதில் எழுதியுள்ளார்.

மேலும் இறப்பதற்கு முன்னர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தமிழ் மக்களுக்கு என் உயிர் தியாகம், இதற்காவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு நான் பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

என் மக்களை வாழ வையுங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள், தமிழக அரசுக்கு துரோகம் செய்யாதீர்கள் என பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்