திருச்சியில் பொலிசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மனைவி உஷாவுடன் வந்த ராஜாவின் வாகனத்தை மறித்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வண்டியை உதைத்ததில், ராஜாவும் அவரின் மனைவி உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில், 3 மாத கர்ப்பிணியான உஷா தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் திருச்சி வந்த கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, உஷாவின் கணவர் ராஜாவிடம் ரூ.5 லட்சமும் உஷாவின் தாய் நூர்து மேரியிடம் ரூ.5 லட்சமும் மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கினார்.
அப்போது உஷாவின் கணவர் கமலிடம் கதறி அழுதுள்ளார் இதனைப்பார்த்து கமலும் கண்கலங்கினார்.