திருமண புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக மாற்றி மோசடி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் போட்டோ ஸ்டுடியோ ஒன்று திருமணத்துக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை, ஆபாச புகைப்படங்களாக மாற்றிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படம் சமூக வலைதளங்களில் தவறாக வலம் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.

தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கேரள பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் உள்ள சதயம் எடிட்&ஸ்டுடியோ என்ற அந்த பிரபல ஸ்டுடியோ கடந்த 5 வருடங்களாக, திருமணங்களில் எடுக்கப்பட்ட சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்களை இதுபோன்று ஆபாச இணையதளங்களுக்கு பயன்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஸ்டுடியோவுக்கு சீல் வைத்த பொலிசார் கைதான உரிமையாளர்கள் சதீசன், தினேஷ் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்