காட்டில் தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை: இந்தியாவில் நடந்த அவலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மிருகங்கள் அதிகம் நடமாடும் காட்டில், பிறந்த ஒருநாளே ஆன குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சின்சோலி நகரின் நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அடர்ந்த காட்டில் புதிதாக பிறந்த பெண் குழந்தையை யாரோ வைத்து விட்டு சென்றுள்ளனர்.

அவ்வழியாக சென்ற ஒரு லொறி ஓட்டுனர் குழந்தையை பார்த்த நிலையில் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

லொறி ஓட்டுனர் மட்டும் குழந்தையை பார்க்காமல் இருந்திருந்திருந்தால், காட்டில் உள்ள மிருகங்களுக்கு குழந்தை இரையாகியிருக்கும் என கூறினால் அது மிகையாகாது!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்