இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக பெண் ஒருவர் தனது கணவரை தோளில் சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் Mathura பகுதியைச் சேர்ந்தவர் BadanSingh.
ஒரு லொறி டிரைவராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்த அவரது வாழ்வில் திடீரென ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
அவரது காலில் ஏற்பட்ட கட்டிகளில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவரது ஒரு காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அவரது மனைவியான பிமலா தேவி, அரசு வழங்கும் இலவச வீல் சேர் ஒன்றை வங்குவதற்காக முயற்சி செய்தார்.
உடற்குறைபாட்டை நிரூபிக்கும் ஒரு சான்றிதழ் இருந்தால்தான் அரசின் இலவச வீல் சேர் கிடைக்கும் என்று அவருக்கு கூறப்பட்டது.
Mathura: A woman was seen carrying her differently-abled husband on her back to office of chief medical officer to obtain a disability certificate, says' we have no access to a wheel-chair or a tricycle. We went to many different offices but still have not got the certificate.' pic.twitter.com/nqtHetCOtZ
— ANI UP (@ANINewsUP) 4 April 2018
ஒரு சான்றிதழுக்காக தனது கணவரைத் தூக்கிக்கொண்டு வாரக்கணக்கில் சுகாதார மையத்திற்கு அலைந்த பிமலா தேவியைக் கண்டு கொள்வாரில்லை.
பல்வேறு அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட அவரால் ஒரு சான்றிதழைப் பெற இயலவில்லை.
பிமலா தேவி தனது கணவரைத் தோளில் சுமந்து கொண்டு திரியும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இதைப் பார்த்த பூபேந்திர சவுத்ரி என்னும் அமைச்சர் “நாகரீகம் வளர்ந்த ஒரு நாட்டில் இது ஒரு பெருத்த அவமானம்” என்று கூறியுள்ளார்.
அந்த தம்பதியினருக்கு தன்னாலான உதவியைச் செய்வதாக உறுதியளித்தார்.
இறுதியாக பிமலாவின் கணவருக்கு சான்றிதழ் கிடைத்து விட்டது.
“எங்கள் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் எனது கணவரை அழைத்துக் கொண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்ல ரிக்ஷாவுக்கு கொடுக்க என்னிடம் காசு இல்லை” என்று கூறும் பிமலா தேவியின் தலையில் குடும்பப் பொறுப்பு முழுவதும் விழுந்து விட்டது.
குடும்பப் பொறுப்பையும் கணவரையும் சுமந்து திரிந்த பிமலா இனி கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடலாம்.
BadanSinghக்கு ஒரு வீல் சேர் வந்து விட்டால் கொஞ்சம் நிலைமை மாறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் அந்த ஏழைத் தம்பதியர்.