இந்தியாவில் கவனமாக இருங்கள்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்

Report Print Arbin Arbin in இந்தியா

காவிரிக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளதால், அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அந்த நாட்டின் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

தமிழகம், கர்நாடகாவில் போராட்டங்கள் வலுவடைந்து வருவதால், அங்கிருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கன் எம்பஸ்ஸி எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அறிவிப்பில், காவிரி நீர் தொடர்பான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சில கட்சிகள் 5-ம் திகதி வரை போராட்டங்களை அறிவித்திருக்கின்றன.

குறிப்பாகத் தமிழகம் - கர்நாடக எல்லையில் இதற்கான போராட்டங்கள் நடைபெறும். இதனால் தமிழகம் - கர்நாடகம் இடையே பேருந்து சேவைகள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், கடைகள் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துவருகின்றன.

எனினும், போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். போராட்டத்துக்கான காரணத்தை அறிந்துகொண்டு வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

உங்களின் பாதுகாப்புகளை உறுதி செய்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்