ஐ.சி.யு.வில் வைத்து மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்: நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாட்னாவில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் முன்னிலையில் வைத்து மணமகளுக்கு மணமகன் தாலிகட்டியுள்ளார்.

மணமகளின் தாய் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் மோசமடைந்துள்ள நிலையில். 15 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாகி இறக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

எனவே, அவரது கடைசி ஆசையான மகளின் திருமணத்தை நடத்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, மறுநாள் புதுமணத்தம்பதிகள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவிலில் மாலை மாற்றிக்கொண்டு, பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன் வந்து நின்று மந்திரம் முழங்க தாலிகட்ட திருமணம் நிறைவடைந்தது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது, புற்றுநோயின் தீவிரத்தினால் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் பாதிப்படைந்துவிட்டது.

அவரின் கடைசி ஆசையாக ஏப்ரல் 18 நடைபெறவிருந்த மகளின் திருமணத்தை ஏப்ரல் 3 செய்துவைக்க முடிவு செய்து திருமணத்தை உரிய அனுமதியுடன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன்பு செய்து வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்