கணவரை கொலை செய்த மனைவி: சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா
269Shares

இந்தியாவில் கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நகரை சேர்ந்தவர் சோட்டிலால் மவுரியா (75). இவர் மனைவி தனுதேவி (65).

மவுரியா கடந்த ஞாயிறு அன்று வீட்டில் தனியாக இருந்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அக்கம்பக்கத்தினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை பொலிசார் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து விசாரித்து வந்த பொலிசார் இது தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மவுரியாவின் மனைவி தனுதேவியே கணவரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தனுதேவி முதலில் பொலிசாரிடம், தான் டெய்லர் கடைக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறினார்.

மவுரியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

அவர் வீட்டில் கொள்ளை நடக்கும் போது இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்த நிலையில் அவர் வீட்டில் எதுவும் திருடு போகவில்லை என தெரிந்தது.

இதனால் பொலிசார் சந்தேகமடைந்து தனுதேவியிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் கணவரை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், மவுரியாவுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதோடு தனது செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்றதாக தெரிவித்துள்ளர்.

இதையடுத்து தனுதேவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்