பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தை பிறக்கும்: பேராசிரியர் பேச்சால் சர்ச்சை

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பெண்கள் குறித்து பேசிய விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கல்லடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் ரஜித்குமார். இவர் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது, ஒரு பெண், ஆண் போல உடையணிந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை எப்படியிருக்கும்? நிச்சயம் திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும் என பேசியுள்ளார்.

மேலும், கேரளாவில் ஏற்கனவே 6 லட்சம் திருநங்கைகள் உள்ளார்கள், இப்போது இங்குள்ள பெண்கள் எல்லாம் ஜீன்ஸ் உடை அணிந்தால் திருநங்கை குணமுடைய குழந்தைகள் தான் பிறக்கும், இது போன்ற பெண்களுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது என அதிர்ச்சி தரும் வகையில் இவர் பேசியுள்ளார்.

இப்படி மோசமாக பேசிய ரஜித்குமார் மீது வழக்கு தொடர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்