காவிரி உரிமை மீட்பு பயணம்: திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் தீவிர திட்டம்

Report Print Gokulan Gokulan in இந்தியா

திமுக செயல் தலைவரான ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை வரும் 7ம்தேதியிலிருந்து தொடங்குகிறார்.

காவிரி மேலாண்மை அமைப்பது குறித்த பிரச்சனையில் மத்திய அரசின் மெத்தனங்களைக்கண்டித்து பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போராடி வருகின்றன.

தமிழகம் முழுவதும் ரயில் மறியல், கடையடைப்பு போராட்டம் நீதிமன்றப்புறக்கணிப்புகள், உண்ணாவிரதப் போராட்டங்கள் என இதன் தீவிரம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் தங்களது எதிர்ப்பைத்தீவிரமாக்கியுள்ள திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்தனது காவிரி உரிமை மீட்பு போராட்டத்தை பயணமாக திருச்சி முக்கொம்புவிலிருந்து வரும் 7ம் தேதி தொடங்குகிறார்.

இவரது தலைமையில் ஏப்ரல் 1 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்நடைபெற்றபோது ஏப்ரல் 5ம் தேதி கடையடைப்பு இதற்கொரு தீர்வு கிடைக்கும்வரை தினமும்சாலை மறியல் செய்வது பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் வரும்போது கறுப்புக் கொடி காட்டுவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்பு பயணம் என்றதலைப்பில் தமிழகம் முழுதும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சுற்றுபயணம்மேற்கொள்வது எனப் பல தீர்மானங்கள் நிறைவேறின.

வரும் 7ம் தேதி திருச்சி முக்கொம்புவிலிருந்து தொடங்க இருக்கும் ஸ்டாலினின் பயணம் அங்கிருந்து சென்னை ஆளுனர் மாளிகை நோக்கி 7 நாள் பயணமாக நடைபெற உள்ளது.

இந்தப் பயணத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, திக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்