தாய் திட்டியதால் சிறுமி எடுத்த அதிர்ச்சி முடிவு!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் தாய் திட்டியதால், பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது தம்பியும் வீட்டில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமியின் தாய் தனது மகளை கண்டித்துள்ளார். அதன்பின்னர், குறித்த மாணவி பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குறித்த மாணவியின் தம்பி பார்த்தபோது, தனது அக்கா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து, சிறுவன் கூச்சலிடுவதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்