லெஸ்பியன் உறவு: கண்டித்த தாயை இரும்பு கம்பியால் அடித்துகொலை செய்த மகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
368Shares

டெல்லியில் ஆசிரியையுடன் லெஸ்பியன் உறவில் இருந்த மகளை கண்டித்த தாய் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரேஷ்மி ரானா(21) என்ற மாணவி தனது ஆசிரியையான நிஷாவுடன் நெருங்கி பழகிவந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரும் லெஸ்பியல் உறவில் ஈடுபடத்தொடங்கினர்.

இதற்கு ரேஷ்மியின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று இரும்பு கம்பியை எடுத்து ஆசிரியையுடன் சேர்ந்து தனது தாயை அடித்துக்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது தந்தை சதீஷ்குமார் வீட்டில் இல்லை. வீட்டிற்கு திரும்பி வந்த அவர் தனது மனைவி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தனது மகள் தான் கொலை செய்துள்ளார் எனவும் அவர் தெரிவித்ததையடுத்து, பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி ஆசிரியை நிஷா மற்றும் மகன் ரேஷ்மிவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்