பிரபாகரன் உயிருடன் இல்லை என நினைத்து கொடியை பயன்படுத்துகிறார் சீமான்: வைகோ ஆவேசம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரை மாவட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நான் ஒரு தமிழன் கிடையாது என்றும் தெலுங்கன் என்று என்னை வைத்து நாம் தமிழர் கட்சியினர் மீட்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு என்னை விமர்சித்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வைகோ, நாம் தமிழர் கட்சி தொண்டர்களை பார்த்து எச்சரித்துள்ளார் இதனால் மதுரையி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, பொலிசார் அதனை சரிசெய்தனர்

இதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ, என்னை தெலுங்கன் என குற்றம்சாட்டி மீம்ஸ்களை சமூகவலைதளத்தில் சீமான் பரப்பி வருகிறார்.

பிரபாகரன் உயிருடன் இல்லை என நினைத்து அவரது கொடியை சீமான் பயன்படுத்தி வருகிறார் என்று ஆவேசத்துடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்