காட்டுத் தீயில் கருகி உயிருக்கு போராடும் இளம்பெண்: அப்பாவிடம் சொன்ன முதல் வார்த்தை

Report Print Santhan in இந்தியா
612Shares
612Shares
lankasrimarket.com

தமிழகத்தில் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியிருப்பதுடன், எஞ்சியுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த தீ விபத்தில் சிக்கி 80 சதவீத காயங்களுடன் இருப்பவர் தான் அனுவித்யா, சென்னையைச் சேர்ந்தவரான இவருக்கு மலையேற்றம் என்றால் அலாதி பிரியம்.

இதுதவிர நீச்சல், மரதன் ஓட்டம் என பலவிதமான விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக வலம்வந்தார்.

கடந்த டிசம்பர் 2017-ஆம் ஆண்டில் ஐந்து கிலோமீற்றர் நீச்சல், 30-கிலோமீற்றர் சைக்கிள் பயணம் அதை தொடர்ந்து 21 கிலோமீற்றர் ஓட்டம் என மூன்று போட்டிகளையும் ஒருசேரக்கொண்ட Triathlon போட்டியில் முழுஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிபெற்றார்.

இந்நிலையில் இவர் தீயில் சிக்கிக் கொண்ட போது அவரை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது இவர் தன் அப்பாவிடம் நான் நல்ல படியாக இருக்கிறேன், சிறிய காயம் தான் என்று போனில் ஆறுதல் கூறியுள்ளார்.

ஆனால் அவரை மருத்துவமனையில் வந்து பார்த்த போது குடும்பத்தினர் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் 80 சதவீத தீக்காயங்களுடன் அவதிப்பட்டு வருகிறார், ஆனால் சிறியக் காயம் என்று சொல்லியுள்ளார்.

அதுமட்டுமின்றி தன்னை பார்க்க வருபவர்களிடம் இன்னும் கொஞ்ச நாட்களில் நான் ஊருக்கு வந்துவிடுவேன். எதுக்கு எல்லோரும் மதுரை வருகிறீர்கள், நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன் அங்கு சந்திக்கலாம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

மேலும் தான் தீயில் சிக்கியிருந்த போது வந்த மலைவாசி ஒருவர் அவரின் சட்டை, லுங்கியை அவள்மீது போர்த்தியுள்ளார், பத்திரமாக இருப்பா என்று கூறியுள்ளார்.

இதனால் அவரை நிச்சயமாக பார்த்த்து நன்றி சொல்ல வேண்டும் என அவரது குடும்பத்தினரிடம் வித்யா தெரிவித்துள்ளார்.

இப்படி கண்டிப்பாக மீண்டு வருவேன் என்று அனுவித்யா நம்பிக்கையுடன் உள்ளதால் மகளின் உறுதி அவரை மீட்டுவரும் என்று நம்பிக்கையுடன் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

தற்போது அனுவித்யா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்