அதிர வைத்த நடிகர் அமிதாப்பச்சன் மனைவி: சொத்துமதிப்பு என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
183Shares
183Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஜெயாபச்சன் 1,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயாபச்சன் சமாஜ்வாதி கட்சி சார்பில் உத்தரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அது தொடர்பான முழுத் தகவலும் வெளியாகியுள்ளது.

வேட்புமனுவில் அவர், சொத்துப்பட்டியலில் தன்னிடம் 62 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளதாகவும், தனது கணவர் அமிதாப்பச்சனிடம் 36 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று தங்களிடம் 13 கோடி ரூபாய்க்கு மதிப்பிலான கார்கள் இருப்பதாகவும், ஒரு ரோல்ஸ் ராய்ஸ், 3 மெர்சிடிஸ், ரேஞ்ச் ரோவர், ஒரு போர்ஸோ என மொத்தம் 13 விலையுயர்ந்த கார்களை குறிப்பிட்டுள்ளனர்.

3.4 கோடி ரூபாய் மற்றும் 50 லட்சம் ரூபாய்க்கு இரண்டு கைக் கடிகாரங்களும், 9 லட்சம் மதிப்புள்ள பேனா ஒன்றும், பிரான்சில் வீடு ஒன்று இருப்பதாகவும் சுமார் 1,175 சதுர அடி கொண்ட அந்த வீடு 2.2 கோடி ரூபாய் மதிப்பிலானது .

மேலும் கணவரான அமிதாப்பச்சன் பெயரில் 3 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அது சுமார் 5.7 கோடி ரூபாய் மதிப்புமிக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு இதே போன்று தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு 493 கோடி ரூபாய் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதுவே இப்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக எம்.பி. ரவீந்திர கிஷோர் சின்ஹா, கடந்த 2014-ஆம் ஆண்டு தன்னுடைய சொத்து மதிப்பு 800 கோடி இருப்பதாக அறிவித்திருந்தார்.

அவரே எம்.பிகளில் அதிக சொத்துடையவராக கூறப்பட்டார். தற்போது ஜெயாபச்சன் சொத்து மதிப்பு 1,000 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளதால், ஜெயாபச்சன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிக சொத்துடையவர்களில் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்