மனதை பிழியும் சோகம்: தீ விபத்து குறித்த கமலின் உருக்கமான பதிவு

Report Print Kabilan in இந்தியா
136Shares
136Shares
lankasrimarket.com

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய காட்டுத் தீயில் சிக்கினர்.

அவர்களில் 8 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 7 பேர், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘குரங்கணி, விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்'

என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்