பயங்கர காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளின் நிலை: விவரம் வெளியானது

Report Print Santhan in இந்தியா
552Shares
552Shares
lankasrimarket.com

தமிழகத்தில் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக டிரக்கிங் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகளில் 8 பேர் உடல் கருகி பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் நேற்று மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் கல்லூரி மாணவ-மாணவிகள் என மொத்தம் 39 பேர் சிக்கியுள்ளனர்.

காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் குழந்தைகள் என 39 பேர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து அவர்கள் அனைவரும் மீண்டும் மலை அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளதால் செய்வதறியாமல் தீயில் சிக்கியுள்ளனர்.

இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், 8 பேர் உடல் கருகி பலியாகியிருப்பதாகவும், அதில் 5 பெண்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவர்கள் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த உயிரிழப்பு குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. மேலும் மீட்கப்பட்டவர்களில் 17 பேரின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்