திருமணமான மூன்று மாதத்தில் உயிரிழந்த கைதி: சிறையில் நடந்தது என்ன?

Report Print Santhan in இந்தியா
503Shares
503Shares
lankasrimarket.com

தமிழகத்தில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் உடல் நலக் குறைபாடு காரணமாக சிறையில் உயிரிழந்த சம்பவம் அவர் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1997-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பழனிபாபா என்பவர் கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக கோயமுத்தூரில் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் கிருஷ்ணசாமி என்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு நடந்து வந்த வேளையில் வழக்கில் கைதான ரிஸ்வான் பாஷா என்பவர் உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் ரிஸ்வான் குடும்பத்தினரோ இந்த கொலைக்கும், அவனுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 20-ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ரிஸ்வான் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக 28-நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.

அப்போது அவருக்கு சமீரா பானு என்றப் பெண்ணை உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களில் மீண்டும் சிறைக்கு சென்ற ரிஸ்வானுக்கு நேற்று முன் தினம் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த உறவினர்கள் போதுமான சிகிச்சை அளிக்காததால்தான் ரிஸ்வான் இறந்து விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் சிறையில் கைதிகளுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், கைதிகளுக்கு உரிய மருத்துவ உதவிகள் வேண்டும், ரிஸ்வானின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்