அந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் அவகாசம்

Report Print Kabilan in இந்தியா
66Shares
66Shares
lankasrimarket.com

இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றம், டி.டி.வி.தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க, மேலும் மூன்று மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் பார்க்லே வங்கியில் 10 மில்லியன் அமெரிக்க டொலரை முறைகேடாக Deposit செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டது, அவற்றில் இரண்டு வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஏனைய ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தன் மீதான அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கு விசாரணையை முடிக்க, மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என தினகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்