நெஞ்சை பதற வைக்கும் உஷா கணவரின் கண்ணீர் புகைப்படம்

Report Print Kabilan in இந்தியா
1864Shares
1864Shares
lankasrimarket.com

தமிழகத்தில் பொலிசார் விரட்டியபோது இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த உஷா என்ற பெண்ணுடைய கணவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(40), தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார், இவருடைய மனைவி உஷா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில் ராஜா தனது மனைவி உஷாவுடன், திருச்சி மாவட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்.

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே ராஜாவின் வாகனம் சென்றபோது, அங்கு சோதனையில் இருந்த போக்குவரத்து காவலர் காமராஜ், ராஜாவின் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அதனை கவனிக்காமல் ராஜா சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ், தனது ஜீப்பில் ராஜாவை விரட்டிச் சென்றுள்ளார். திருச்சி-தஞ்சை சாலையில் பெல் ரவுண்டானா அருகே காவலர் காமராஜ், அவர்களை வழி மறித்ததோடு, ராஜாவின் இருசக்கர வாகனத்தை ஆவேசமாக எட்டி உதைத்துள்ளார்.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த கர்ப்பிணியான உஷா, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் திரண்ட மக்கள் உஷாவையும், அவரது கணவர் ராஜாவையும் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, காவலர் காமராஜூக்கு எதிராக கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் மருத்துவமனையில் உஷாவின் உடலில் இருந்த நகைகளை, அவரது கணவர் ராஜாவிடம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ரத்த கறைபடிந்த சட்டையுடன் ராஜா, தனது மனைவி எங்கே தனது குழந்தை எங்கே என்று கதறி அழுதுள்ளார், இந்த புகைப்படம் காண்போர் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்