தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறினார்: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ராஜா

Report Print Kavitha in இந்தியா
133Shares
133Shares
lankasrimarket.com

தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியன் என்று கூறியதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் எச்.ராஜா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்படுவதை போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பதிவு செய்திருந்தது சர்ச்சையை கிளப்பியது.

தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், பதிவை நீக்கியதுடன், தனது அனுமதியின்றி அட்மின் பதிவு செய்ததாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியுள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது, தமிழ் என்ற மொழியே இருக்கக்கூடாது என தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம்.

இந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும் போது அதற்கான தாக்கம் ஏற்படுவதால் திராவிட கட்சிகள் வசைபாடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இவரது இப்பேச்சு மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்