பாத்ரூமில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த இளம் தம்பதி: நடந்தது என்ன?

Report Print Raju Raju in இந்தியா
3667Shares
3667Shares
lankasrimarket.com

இந்தியாவில் வீட்டு பாத்ரூமில் நிர்வாண நிலையில் தம்பதிகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் இந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் நீரஜ் சிங்கானியா. இவர் மனைவி ருச்சி.தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஹோலி பண்டிகையை தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் நீரஜும், ரிச்சியும் கொண்டாடிய நிலையில் மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

பின்னர் தங்கள் அறைக்குள் சென்றுள்ளனர். நீரஜ்ஜின் தந்தை பிரேம் பிரகாஷ் வெகுநேரமாக அந்த அறையின் கதவை தட்டியும் அவர்கள் திறக்காததோடு, எந்த பதிலும் வரவில்லை.

பின்னர் குடும்பத்தார் கதவை உடைத்து சென்று பார்த்த போது உள்ளே இருந்த பாத்ரூமில் நீரஜும், ருச்சியும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் இரண்டு சடலங்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.

குறித்த பாத்ரூமில் எரிவாயு ஹீட்டர் இருப்பது தெரியவந்தது.

ஆனால் அதை அவர்கள் பயன்படுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் தம்பதியின் இறப்பு எப்படி ஏற்பட்டது என பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்