எனக்கா அரசியல் தெரியாது? சென்னையில் மாஸ் காட்டிய நடிகர் ரஜினிகாந்த்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார்.

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்புக்குப் பின் கல்லூரி மாணவர்கள், மக்கள் மத்தியில் ரஜினி உரையாற்றினார்.

ரஜினி வருவதை முன்னிட்டு அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.

அப்போது எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே உள்ளது. இங்கு கூடியிருக்கும் கூட்டம் அரசியல் மாநாடு போல் உள்ளது. இதில் அரசியல் பேச வேண்டாம் என நினைத்திருந்தேன்.

ஆனால், அரசியல் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகியதால் நானும் அரசியல் கற்றுக்கொண்டேன்.

1996-ஆம் ஆண்டு முதல் அரசியல் தண்ணீர் என் மீது தெளிக்கப்பட்டுள்ளது. அரசியவாதிகள் அவர்களது வேலையைச் சரியாகச் செய்யவில்லை. அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்.

எனக்கா அரசியல் தெரியாது என்கிறீர்கள்? இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது. தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன்.

கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் கட்சியைக் கட்டிக்காத்தார்.

எம்.ஜி.ஆர் ஒரு தெய்வ பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் அதற்கு எம்.ஜி.ஆர் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை.

ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும். ஆங்கிலத்தில் தவறாக பேசினால் கிண்டல் செய்வார்கள். எனவே நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். பிறகுதான் அரசியல் என்றார் ரஜினிகாந்த்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்