91 வயதில் திருமணக்கோலம் கொண்ட தம்பதிகள்: மெய்சிலிர்த்த மக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 91 மற்றும் 80 வயது நிரம்பிய தம்பதிகள் நிருமணக்கோலம் கொண்டதை அங்குள்ள மக்கள் சிலிர்ப்புடன் வரவேற்றுள்ளனர்.

திருச்சி உறையூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ரயில்வே ஊழியர் சீனிவாசன்(91) மற்றும் அவரது மனைவி பத்மாவதி(80) ஆகிய இருவருக்கும் உறையூர் ராமர் மடத்தில் இன்று 90 ஆம் வயது திருமணம் நடைபெற்றுள்ளது.

அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் என அனைவரும் ஆசி பெற்றனர்.

இத்திருமணத்தில் 4 தலைமுறைகளை சேர்ந்த மகன், மகள், மகள் வழி பேரப்பிள்ளைகளுடன், உறவினர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1955 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி 60,70, 80 ஆகிய வயதுகளில் திருமண கோலம் கண்டதோடு, தற்போது 91-வது வடதிலும் திருமண கோலம் கொண்டுள்ளனர்.

இதனை அந்த ஊர்மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்