16வது மாடியிலிருந்து குதித்து தயாரிப்பாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

Report Print Raju Raju in இந்தியா

பிரபல தயாரிப்பாளர் சஞ்சய் 16-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ishqbaaz என்ற மிக பிரபலமான இந்தி தொலைகாட்சி தொடரை தயாரித்தவர் சஞ்சய் பய்ரகி.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹோலி கொண்டாடிவிட்டு மாலை 4.30 மணிக்கு தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த நிலையில் 16-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Credit:twitter

முதலில் சஞ்சய் தவறி விழுந்தார் என பொலிசார் நினைத்த நிலையில், அவர் எழுதி வைத்த கடிதம் மூலம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

அந்த கடிதத்தில், இது என் தவறு தான், என் குடும்பம் துன்பத்தில் உள்ளது, எனக்கு பணப்பிரச்சனை உள்ளது.

இதற்கு யாரும் பொறுப்பேற்கக்கூடாது என எழுதப்பட்டுள்ளது.

உயிரிழந்த சஞ்சய்க்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Credit:twitter

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்