கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மகனுக்கு திருமணம்: மணமகள் யார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரூசல் மேத்தா மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள பெரிய வைர நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது ரோசி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம்.

இதன் நிறுவனர் ரூசல் மேத்தாவின் இளைய மகள் ஷோல்கா மேத்தா. ஷோல்காவும், ஆகாஷும் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்திலிருந்தே நல்ல நண்பர்களாக உள்ளார்கள்.

இந்நிலையில் இருவருக்கும் இந்தாண்டுக்குள் திருமணம் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

credit:Social media

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்