ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலிக்கு வரமுடியாததால் விராட் கோஹ்லி என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

துபாயில் உறவினரின் திருமணத்திற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி தான் தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார்.

27-ஆம் திகதி துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு அருகில் உள்ள லோகண்ட்வாலா பகுதியின் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலுக்குப் திரைப்பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், சோனம் கபூர், ஹேமா மாலினி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ரசிகர்களும் வரிசையில் ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

அவரின் மறைவு திரையுலகினருக்கு மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கங்குலி, சேவாக், யூசப் பதான் , விவிஎஸ் லட்சுமணன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா தொடருக்காக கோஹ்லியும், படப்பிடிப்பிற்காக அனுஷ்கா சர்மா போபாலும் சென்றிருந்ததால் இருவராலும் ஸ்ரீதேவிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் நேற்று மும்பை வந்த அனுஷ்கா சர்மாவுடன், கோஹ்லியும் இணைந்து ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்