சர்வதேச மகளிர் தினத்தன்று கமல் கட்சி பொதுக்கூட்டம்: பெண்களுக்கு சிறப்பு அழைப்பு

Report Print Harishan in இந்தியா

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் வருகின்ற 8-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் தனது புதிய கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் வைத்துள்ளார்.

அந்த கட்சியின் முதல் பொதுக்கூட்டம் சமீபத்தில் மதுரையில் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் திகதியன்று சென்னை YMCA திடலில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடபெற்று வருவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மேலும், கமல் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் இந்த கூட்டத்தில் பெண்கள் பெருந்திரளாக பங்கேற்று தங்களின் ஆதரவை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்