பிடர்கொண்ட சிங்கமே பேசு: கருணாநிதிக்கு வைரமுத்து உருக்கமான வேண்டுகோள்!

Report Print Harishan in இந்தியா

வயது முதிர்வால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக ஓய்வில் இருந்து வருகிறார்.

முதலில் மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு தலைவர்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், “பிடர்கொண்ட சிங்கமே பேசு” என்ற தலைப்பில் கருணாநிதி குறித்து உருக்கமான கவிதை வீடியோ ஒன்றை கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை வருமாறு:

பிடர் கொண்ட சிங்கமே பேசு

இடர் கொண்ட தமிழர் நாட்டின்

இன்னல்கள் தீருதற்கும்,

படர்கின்ற பழமை வாதம்

பசையற்றுப் போவதற்கும்,

சுடர்கொண்ட தமிழைக் கொண்டு

சூள்கொண்ட கருத்துரைக்க,

பிடர்கொண்ட சிங்கமே

நீ பேசுவாய் வாய்திறந்து.

அந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்