அசிங்கப்படுத்திய மனைவி வீட்டார்: உயிரை விட்ட புதுமாப்பிள்ளை

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் திருமணமான சில மாதங்களில் மனைவி வீட்டார் பொலிசில் புகார் கொடுத்ததால். கணவர் அவர் தந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (55). இவர் மகன் கீர்த்தி ஆசிர் (29). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக உள்ளார்.

ஆசீருக்கும் சுகன்யா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தற்போது சுகன்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்றும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பான நிலையில் இதுகுறித்து சுகன்யா குடும்பத்தினர் பொலிசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் பேராசிரியர் பணி நிரந்தரம் தொடர்பாக கீர்த்தி ஆசீருக்கு கல்லூரியில் நாளை நேர்முகத்தெரிவு நடப்பதாக இருந்தது.

இதுதொடர்பாக நேற்று ஆசீர், இஸ்ரவேலுடன் கல்லூரிக்கு சென்று நிர்வாகத்தினரிடம் தன் மீது மனைவி குடும்பத்தினர் அளித்துள்ள பொலிஸ் புகார் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பொலிசில் சென்று பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

மனைவி குடும்பத்தினர் புகாரால் அவமானம் அடைந்ததோடு, தனக்கு பேராசிரியர் பணி நிரந்தரம் கிடைக்காமல் போய் விடுமென கருதிய ஆசீர், தந்தை இஸ்ரவேலுடன் விஷம் குடித்து கல்லூரி வாசலில் மயங்கினார்.

பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்