பிரபல சினிமா பைனான்சியர் மகள் கடத்தலா? பொலிசில் புகார்

Report Print Athavan in இந்தியா

பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவின் மகள் காணவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

முகுந்த்சந்த் போத்ராவின் இல்லம் சென்னை தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப் அருகே உள்ளது.

இவர் கந்துவட்டி புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சினிமா தயாரிக்க இவர் கடன் கொடுத்தவர்களிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டினார் என்று இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதே வழக்கில் அவரது 2 மகன்களான சந்தீப் போத்ரா மற்றும் குகன் போத்ரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் தன் தந்தையின் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மகள் கரிஷ்மா போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனால் சிறையில் இருந்து வெளியே வந்த முகுந்த்சந்த் போத்ரா, தொடர்ந்து சினிமா பைனான்ஸ் தொழிலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தனது மகள் கரிஷ்மா போத்ராவை காணவில்லை என நேற்று தியாகராயநகர் பொலிஸ் துணை கமிஷனர் அரவிந்தனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

முகுந்த்சந்த் போத்ராவின் மனுவை பெற்றுக்கொண்ட பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரிஷ்மா திருமணம் ஆகாதவர், எனவே காதல் விவகாரத்தில் யாருடனும் ஓட்டம் பிடித்தாரா?, அல்லது உண்மையிலேயே அவர் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்