5 சிறுவர்களை நிர்வாண ஊர்வலம் நடத்திய நபர்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

விவசாய நிலத்தில் இருந்து முள்ளங்கியை திருடியதாக கூறி 5 சிறுவர்களை ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள சோகினா காலா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்வத்தில் பாதிக்க்கப்பட்ட சிறுவன் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், நாங்கள் பட்டத்திற்கு பின்னால் ஓடி சென்றோம், அப்போது தெரியாமல் விவசாய நிலத்திற்குள் சென்றுவிட்டோம்.

பசியாக உணர்ந்தோம். அங்கு முள்ளங்கியை பார்த்தோம், அதனை எடுத்து சாப்பிட்டோம். எங்களை பார்த்த விவசாயி அடித்துவிட்டார் என கூறிஉள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 5 பேரும் 8 வயது முதல் 10 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது.

சிறார்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது. மழை மற்றும் குளிரில் சிறார்களை ஆடையை களைய செய்து விவசாயி துரத்தி உள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பிர்ச்னையில் சிக்கிய விவசாயி தற்போது தலைமறைவானதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...