கர்ப்பிணி பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை: கணவரின் காதலியே கொன்றது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

ஹைதராபாத்தில் துண்டு துண்டாக வெட்டி கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகரில் உள்ள கொண்டபூர் பகுதியில் கடந்த 31-ஆம் திகதி கர்ப்பிணி பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து சடலம் கிடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கமெராவை பொலிசார் ஆராய்ந்ததில் ஒரு பெண்ணும், ஆணும் பைக்கில் அந்த பகுதியாக பெரிய பையுடன் சென்றது தெரியவந்தது.

இதை வைத்து பொலிசார் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், கர்ப்பிணி பெண்ணின் கணவரின் காதலியே அவரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது சம்மந்தமாக விகாஷ், மம்தா, அனில், அமர்கந்த் ஆகிய நால்வரையும் பொலிசார் கைது செய்து விசாரத்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் பிங்கி ஆகும், பீகாரை சேர்ந்த இவருக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் விகாஸுடன் பிங்கிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கணவரை பிரிந்து விகாஷை பிங்கி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் விகாஷ் சில மாதங்களுக்கு முன்னர் ஹைதராபத்துக்கு வேலை தேடி சென்றுள்ளார்.

அங்கு அனில், மம்தா ஜகா, அமர்கந்த் ஆகியோருடன் விகாஷ் தங்கியுள்ளார்.

இதில் மம்தாவுக்கும் விகாஷுக்கும் தொடர்பு இருந்துள்ளது, இந்நிலையில் தான் ஹைதராபாத்துக்கு பிங்கி சென்று விகாஷுடன் தங்கியுள்ளார்.

தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் விகாஷ் மம்தாவிடம் கொடுத்த நிலையில் இது பிங்கிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிங்கிக்கும், மம்தாவுக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் அவரை தனது கணவர் மற்றும் உடனிருப்பவருடன் கொலை செய்ய மம்தா முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து கர்ப்பமாக இருந்த பிங்கியை கொடூரமாக தாக்கி மம்தா கொலை செய்துள்ளார்.

பின்னர் ரம்பம் மூலம் அவர் உடலை அறுத்து பிறகு மூட்டையில் கட்டி உள்ளே வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்