பிரபல திரைப்பட நடிகர் ஹரி குமரன் மரணம்

Report Print Raju Raju in இந்தியா

மலையாள திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஹரிகுமரன் தம்பி தனது 56-வது வயதில் காலமானார்.

பிரபல நடிகர் பிரித்விராஜுடன் தேஜா பாய் & பேமிலி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஹரிகுமரன்.

இவர் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிகுமரன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு பிரிந்தது.

உயிரிழந்த ஹரிகுமரனுக்கு சுஷாமா என்ற மனைவியும், கெளரி என்ற மகளும் உள்ளனர்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்