பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை புனிதமாக்க ஊரார் செய்த இரக்கமற்ற செயல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அவரை தூய்மையாகவும், புனிதமாகவும் ஆக்க பஞ்சாயத்தார் சிறுமிக்கு மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஸ்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ஆம் திகதி அர்ஜூன் யாதவ் என்ற இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தவறு செய்த அர்ஜூனுக்கு தண்டனை தராத அவர்கள் வெறும் அபராதம் மட்டும் விதித்துள்ளனர்.

அதே நேரம் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மீண்டும் புனிதமாக மாறவேண்டும் என கூறிய பஞ்சாயத்தார் இரக்கமின்றி ஒரு விடயத்தை செய்தனர்.

அதன்படி சிறுமியை நன்றாக குளிக்க வைத்து அவர் தலையை மொட்டை போட்டுள்ளனர்.

இதோடு சிறுமியின் குடும்பத்தார் ஊர் மக்கள் அனைவருக்கும் கறிவிருந்து மற்றும் மது விருந்து அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தற்போது ஊடகத்தில் வந்த நிலையில் குறித்த கிராமத்துக்கு சென்ற பொலிசார் குற்றவாளி அர்ஜூனை கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு மொட்டை போட உத்தரவிட்ட பஞ்சயத்து தலைவர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்