இரவில் இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை: மர்ம நபர்களின் கொடூர செயல்

Report Print Kabilan in இந்தியா
134Shares
134Shares
ibctamil.com

சென்னை அருகே மென்பொருள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 15 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த நாவலூரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தாழம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் அவர், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அச்சமயம், அவரின் பின்னால் வந்த மர்ம நபர்கள், அவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர், இதனால் சாலையில் நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணை அந்த நபர்கள் அருகே உள்ள, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் 15 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியையும், அப்பெண்ணிடம் இருந்து திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த குறித்த பெண்ணை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்